மலையக பல்கலைக்கழகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

மலையத்தில் பல்கலைக்கழகமொன்றை அமைப்பது தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நுவரெலியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது , கொட்டகலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன் போது குறித்த பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக சர்வதேசத்திடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் குறித்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெளிவுபடுத்தியுள்ளார்.

அந்தவகையில் மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் போது மலையகத்துக்கென பிரத்தியேக பல்கலைக்கழகமொன்று அமைக்கப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *