கிளிநொச்சியில் காணாமல் போனோரை பதிவு செய்யும் அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த அலுவலகத்தில் காணாமல் போனோர் பற்றிய பதிவுகளை மேற்கொள்ளும் செயற்பாடுகள் இன்று (08) காலை ஆரம்பமாகியது.
எனினும் இதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன் குறித்த அலுவலகத்தினால் பதிவுகளுக்கு அழைக்கப்பட்டிருந்த அழைப்பு கடிதங்களையும் அலுவலகத்தின் முன் தீயிட்டுக் எறித்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பெருமளவான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

