Lust Stories 2 | கஜோல், தமன்னா, மிருணாள் தாக்கூர் நடிக்கும் ஆந்தாலஜியின் டீசர் எப்படி?

கஜோல், தமன்னா, மிருணாள் தாக்கூர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ ( Lust Stories 2) ஆந்தாலஜி சீரிஸின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற தலைப்பில் இந்தி ஆந்தாலஜி சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகியோர் இயக்கத்தில் வெளியான இந்த ஆந்தாலஜியில் ராதிகா ஆப்தே, மணிஷா கொய்ராலா, க்யாரா அத்வானி, புமி பட்னேகர், விக்கி கவுசல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெண்களின் விருப்பங்களை அவர்கள் பார்வையிலிருந்து வெளிப்படையாக பேசிய இந்த ஆந்தாலஜி ரசிகர்களிடையே ஹிட்டடித்தது.

அந்த வகையில் தற்போது இதன் இரண்டாம் பாகம் வரும் ஜூன் 29-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்த ஆந்தாலஜியில, கஜோல், தமன்னா, விஜய் வர்மா, தில்லோடமா ஷோம், அம்ருதா சுபாஷ், அங்கத் பேடி, குமுத் மிஸ்ரா, மிருணாள் தாக்கூர், நீனா குப்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை அமித் ரவீந்தர்நாத் சர்மா, கொங்கோனா சென் சர்மா, ஆர்.பால்கி, சுஜோய் கோஷ் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

டீசர் எப்படி? – இந்த ஆந்தாலஜியானது 4 எபிசோட்களாக உருவாக்கப்பட்டுள்ளது. டீசரின் தொடக்கத்தில் நீனா குப்தாவின் தாயார், ‘புதிதாக வண்டி வாங்கும்போது டெஸ்ட் டிரைவ் செய்வது போல, திருமணத்துக்கு முன்பு டெஸ்ட் டிரைவ் இல்லையா?’ என பேசும் வசனம் ஆந்தாலஜி பேச முனையும் விஷயத்துக்கான ஒற்றைப் பதம். அடுத்து டயலாக் இல்லாமல் நகரும் காட்சிகளும் பின்னணி இசையும் ஈர்க்கிறது. தமன்னா, கஜோல், மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட முக்கிய நடிகைகளுடன் உருவாகியுள்ள இந்த டீசர் ட்விட்டரில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *