வடகொரியா இன்று நீண்டதூர வீச்சுடைய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை ஏவியுள்ளது.
தென் கொரிய ஜனாதிபதி மற்றும் ஜப்பானிய பிரதமருக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ள நிலையில் வட கொரியா இந்த ஏவுகணையை ஏவியுள்ளது.
வட கொரிய தலைநகர் பியோங்யாங்கிலுள்ள சுனான் பகுதியிலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்தளக தென் கொரியாவின கூட்டுப்படைத் தளபதி தெரிவித்துள்ளார். இது ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஏவுகணை 6.000 கிலோமீற்றர் உயரத்துக்கு சென்றதாக ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

