கிளாமர் இல்லாமல் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. நடிப்பு மட்டுமின்றி இவருடைய நடனத்திற்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
கடந்த வருடன் இவர் நடிப்பில் கார்கி படம் தமிழில் வெளிவந்தது. மேலும் தெலுங்கு விரடா பருவம் படத்தில் நடித்திருந்தார். இதில் கார்கி நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்த படம்
இந்நிலையில், அடுத்ததாக சாய் பல்லவி நடக்கவிருக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அரவிந்த் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ராமாயணம் படத்தில் சீதையாக நடிக்க சாய் பல்லவி முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இப்படத்தில் நடிப்பதற்காக இரண்டு வருடங்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் நடிகை சாய் பல்லவி. இப்படத்தில் நடிக்க இந்த இரண்டு வருடத்தில் வேறு எந்த படத்தில் சாய் பல்லவி நடிக்கமாட்டார் என கூறப்படுகிறது.
ஒரே ஒரு படத்திற்காக இரண்டு ஆண்டு சினிமா வாழ்க்கையை சாய் பல்லவி பயணம் வைக்கிறாரே என இப்போதே திரை வட்டாரத்தில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

