சீனர் உள்பட 3 விண்வெளி வீரர்களுடன் புதிய விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவியுள்ளது.சீனாவின் லாங் மார்ச் 2எப் ரொக்கெட் மூலம் ஷென்சூ-16 விண்கலம் ஜியுகுவான் செயற்கைகோள் ஏவுதளத்திலிருந்து 9:31 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இது ஏவப்பட்ட 10 நிமிடங்களுக்கு பிறகு, புவி வட்டப்பாதையை அடைந்து, அதற்கான நியமிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நுழைந்தது. வீரர்கள் இருந்த விண்கலம் தனியாக பிரிந்து விண்வெளி நிலையத்தை நோக்கி பயணித்தது.
விண்வெளி வீரர்கள் ஏழு மணி நேரத்திற்கும் குறைவான பயணத்திற்குப் பிறகு, சுமார் 400 கிமீ உயரத்தில் உள்ள சீனாவின் சொந்த விண்வெளி நிலையமான டியான்கேவுக்குள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஜிங் ஹய்பெங், ஜுயங்ஜு, குய் ஹய்ச்சவ் ஆகிய 3 வீரர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டனர். பெய் ஹாங் பல்கலைக்கழக பேராசிரியர் குய் ஹய்ச்சவ் விண்வெளிக்கு சென்ற முதல் சீன குடிமகன் என்ற சிறப்பை பெற்றார். இவர்கள் அங்கு 5 மாதங்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

