யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ் நகரில் உள்ள பிரபல முதலாளியும் அவரது நகை கடையில் பணிபுரிந்த இளம் யுவதியும் நேற்றியதினம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
உயிர்ழந்த இருவரும் சுமார் ஓரிரு மணித்தியால இடைவெளியில் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
கொழும்பில் மனைவி பிள்ளைகள்
சம்பவத்தில் நகைக்கடையில் பணிபுரிந்த நாவாந்துறையை சேர்ந்த 22 வயதான யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
இந்நிலையில் அவர் தற்கொலை செய்த தகவல் நகைக்கடையிலிருந்தவர்களிற்கு தெரிய வந்ததையடுத்து, மதியம் வர்த்தகர் தனது வீட்டிற்கு மதிய உணவு அருந்த சென்றபோது வீட்டிலேயே தற்கொலை செய்துள்ளார்.
நாவலர் வீதி, ஆனைப்பந்தியில் உள்ள தனது வீட்டில் வர்த்தகர் தற்கொலை செய்து கொண்டுள நிலையில் அவரது மனைவி, பிள்ளைகள் தற்போது கொழும்பில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

