எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது.
நாட்டில் நிலவும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன்,நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள மரண அடி மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்தும் இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

