முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டது தொடர்பாக நெட்டிசன்களின் கிண்டல்களுக்கு நடிகை கீர்த்தி ஷெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி. ‘உப்பெனா’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘கஸ்டடி’ படத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
கடந்த சில நாட்களாகவே கீர்த்தி ஷெட்டி முகத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கடுமையான ட்ரோல் செய்து வந்தனர். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள கீர்த்தி ஷெட்டி, ‘இதுபோன்ற விமர்சனங்களுக்குப் பின்னால் உள்ள உள்நோக்கம் புரியவில்லை’ என்று கூறியுள்ளார்.

