ரஸ்யாவிற்கு எதிராக புதிய தடைகளை அறிவித்தது அவுஸ்திரேலியா

ரஸ்யாவிற்கு எதிராக புதிய தடைகளை விதிப்பதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

ஜி7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தடைகுறித்து அறிவித்துள்ளார்.

அணுசக்தி ஆராய்;ச்சி உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆயுத உற்பத்தி போன்றவற்றில்  ஈடுபட்டுள்ள ரஸ்யாவின் தேசிய அணுசக்தி கூட்டுத்தாபனத்தின் துணை நிறுவனங்களை இலக்குவைத்தே அவுஸ்திரேலியா புதிய தடைகளை அறிவித்துள்ளது.

ரஸ்யாவின் மிகப்பெரிய பெட்ரோலிய நிறுவனமான ரொஸ்நெவ்ட் உட்பட வேறு பல நிறுவனங்களையும் அவுஸ்திரேலியா இலக்குவைத்துள்ளது.

ரஸ்யாவின் போரினால் ஏற்பட்டுள்ள சர்வதேச தாக்கத்திற்கு தீர்வை காண்பதற்காக ஜி7 நாடுகளும் சர்வதேச சமூகமும் மேற்கொள்ளும் முயற்சிகளிற்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்கும் எனவும் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *