உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ரஸ்யா தனது படைகளை முற்றாக விலக்கிக்கொள்ளவேண்டும் என ஜிஏழு நாடுகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜப்பானின் ஹிரோசிமாவில் இந்த வேண்டுகோள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் என சர்வதேசரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பகுதியிலிருந்து ரஸ்யா தனது படையினரையும் ஆயுததளபாடங்களையும் உடனடியாகவும் முழுமையாகவும் நிபந்தனையற்ற விதத்திலும் விலக்கிக்கொள்ளவேண்டும் என ஜிஏழு நாடுகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ரஸ்ய படையினரையும் இராணுவதளபாடங்களையும் முழுமையாக விலக்கிக்கொள்ளாமல் அமைதி சாத்தியமி;ல்லை என ஜிஏழு நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனிற்கான தங்கள் ஆதரவில் என்றுமாற்றம் ஏற்படாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

