உலகின் முதல் நிலை வீரர் அல்காரஸை 135 ஆவது நிலை வீரர் தோற்கடித்தார்

உலகின் முதல்நிலை  வீரரான  ஸ்பெய்னின் கார்லோஸ் அல்கராஸ், இத்தாலிய பகிரங்க சுற்றுப்போட்டியில் அதிகம் அறியப்படாத வீரர் ஃபாபியன் மரோஸானிடம் தோல்விற்றார்.

20 வயதான கார்லோஸ் அல்காரெஸ், கடந்த வருடம் அமெரிக்கப் பகிரங்க டென்னிஸ் சுற்றுப்போட்டியில் பிரிவில் சம்பியனாகியவர்.

தற்போது உலகத் தரவரிசையில் இரண்டாமிடத்திலுள்ள அவர், இத்தாலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளின் பின்னர் வெளியிடப்படவுள்ள புதிய தரவரிசைப் பட்டிடியலில் முதலிடத்தைப் பெறவுள்ளார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இத்தாலிய பகிரங்க டென்னிஸ் 3 ஆவது சுற்றுப்போட்டியில் அல்கராஸை ஹங்கேரியின் ஃபாபியன் மொராஸன் 6-3, 7-6, (7/4)  விகிதத்தில் வென்றார்.

23 வயதான மொராஸன் உலக டென்னிஸ் தரவரிசையில் 135 ஆவது இடத்திலுள்ள வீரர் 2021 ஜூலையின் பின்னர் அல்கராஸை தோற்கடித்தவர்களில் தரவரிசையில் மிகவும் கீழ்நிலையிலுள்ள வீரர் இவர்.

ஃபாபியன் மொராஸன் 

களிமண் தரையில் அல்காரெஸ் இறுதியாக விளையாடிய 12 போட்டிகளில் வெற்றியீட்டியிருந்தார். ஸ்பெய்னின் பார்சிலோனா மற்றும் மட்றிட் நகரங்களில் நடந்த சுற்றுப்போட்டிகளில் சம்பியன் பட்டங்களையும் வென்றிருந்தார்.

களிமண் தரை கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் சுற்றுப்போட்டியான, பிரெஞ்சு பகிரங்கச் சுற்றுப்போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இச்சுற்றுப்போட்டியில் சம்பியனாகுவதற்கு அதிக வாய்ப்புள்ள ஒருவராக கார்லோஸ் அல்கராஸ் கருதப்பட்ட நிலையில் ரோமில் அவர் எதிர்பாராத தோல்வியைத் தழுவியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *