நியூசிலாந்தில் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்டு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 100க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு விடுதியில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், 90க்கும் மேற்பட்டார் தீ விபத்தில் சிக்கி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் தீயணைப்பு துறையினரும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

