பிரபல கர்னாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, உயர்தர சிகிச் சைக்கு பிறகு குணமடைந்து, பிரிட்டனில் உள்ள உறவினர் வீட்டில் ஓய்வில் இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது மகன் அம்ரித் ராம்நாத் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்ப தாவது: இசை நிகழ்ச்சிக்காக பாம்பே ஜெயஸ்ரீ, கடந்த மார்ச் 25-ம் தேதிபிரிட்டன் சென்றிருந்தார். திடீரென அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அங்கு உள்ள உயர்தர மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அவருக்கு குருதிநாள அழற்சி (Aneurysm) நோய் கண்டறியப்பட்டது.
உயர்தர சிகிச்சை: தொடர்ந்து மருத்துவக் குழுவினரின் அறிவுறுத்தலோடு அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் குணமாகியுள்ள அவர், தற்போது பிரிட்ட னில் உள்ள எங்கள் உறவினரின் இல்லத்தில் ஓய்வில் இருக்கிறார்.
‘‘உடல்நலம் பாதிக்கப்பட் டிருந்த நான், நலம் பெற வேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொண்ட உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்’’ என்று அவர் என்னிடம் கூறினார்.

