உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலன் மாஸ்க் கடந்தாண்டு ஒக்டோபரில் 44 பில்லியன் டொலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை அவர் நடைமுறைப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், டுவிட்டரில் தொலைபேசி இலக்கம் இன்றி Audio, Video அழைப்பு வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
டுவிட்டர் நிறுவனத்தை எலன் மாஸ்க் விலைக்கு வாங்கியதில் இருந்து, இதனை இலாபகரமாக மாற்றுவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

