நான் ரொனால்டோவின் ரசிகன்: விக்கெட் கொண்டாட்டம் குறித்து பதிரனா பதில்

நான் கால்பந்து வீரர் ரொனால்டோவின் தீவிர ரசிகன் என்று சிஎஸ்கேவின் நட்சத்திர பவுலராக உருவாகி வரும் மதிஷா பதிரனா தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று பிற்பகலில் நடைபெற்ற சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. இப்போட்டியில் 3 விக்கெட்கள் எடுத்து 15 ரன்களை விட்டுக் கொடுத்த பதிரனாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் போட்டி முடிந்த பிறலு பதிரானாவிடம், விக்கெட் எடுத்த பிறகு கைகளை கட்டிக் கொண்டு கண்களை மூடும் அவரது கொண்ட்ட முறை குறித்து கேள்வி எழுப்பட்டது. சமூக வலைதளங்களில் பலரும் இதே கேள்வியை ஐபிஎல் தொடங்கியது முதலே கேட்டுக் கொண்டிருந்தனர்.

அதற்கு பதிரனா தற்போது பதிலளித்துள்ளார். அது குறித்து அவர் கூறும்போது, “ நான் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோவின் தீவிர ரசிகன். அதனால் விக்கெட் எடுத்த பிறகு அவரை போன்று கொண்டாடுகிறேன். எனது திறமைகளில் நம்பிக்கை காட்டிய சிஎஸ்கே நிர்வாகத்திற்கு நன்றி” என்று தெரிவித்தார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் பதிரனா இதுவரை 10 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *