நீண்டகால இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் இந்திய விமானப்படையால் நன்கொடையாக சீனக் குடாவில் அமைந்துள்ள விமானப்படை கல்லூரியில் புதிய கேட்போர் கூடமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் இந்திய விமானப்படை பிரதானி எயா சீப் மார்ஷல் வீ ஆர் சௌத்ரியால் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

அமைக்கப்படவுள்ள புதிய கேட்போர் கூட கட்டடத்துக்குள் 700 பேர் அமரக் கூடிய வசதி காணப்படும். 6 மாதங்களுக்குள் சகல நவீன வசதிகளுடன் இந்த கேட்போர் கூடம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இலங்கை விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுதர்ஷண பத்திரண தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை , இந்திய விமானப்படைகளின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


