சீன நாட்டின் வெளிவிவகார அமைச்சர் குயின் கேங் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளார்.
இன்றும் நாளையும் அவர் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த சந்திப்புக்களின் போது இரு தரப்பு உறவுகள், சர்வதேச மற்றும் பிராந்திய சூழ்நிலையில் ஆழமான தொடர்புகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹபாகிஸ்தானுக்கும்இ சீனாவுக்கும் இடையிலான சாலை வரைபடத்தை உருவாக்கி உலகளாவிய நிலப்பரப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

