பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் தன் மீதுள்ள வழக்குகளில் பிணைகளை நீட்டிப்பதற்காக நீதிமன்றங்களில் நேரில் ஆஜராகி வருகிறார்.
அதற்கமைய கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் லாகூர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜராக சக்கர நாற்காலியில் வந்துள்ளார். அப்போது அங்கு நின்ற கூட்டத்தினர் அவரை நெருக்கித் தள்ளியதில் மீண்டும் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அவரது கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.
பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இவ்வாறு இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் அவரை 10 நாட்கள் ஓய்வெடுக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து இம்ரான்கான் தரப்பில் அதில் ‘தனக்கு எதிராக 3ஆவது படுகொலை முயற்சி நடந்துள்ளது. எனவே எனது பொது வெளிப்பாட்டைத் தவிர்ப்பதற்காக தனக்கு எதிரான அரசியல் வழக்குகளை இரத்து செய்ய வேண்டும். வழக்குகள் அனைத்தும் அரசியலுக்காக புனையப்பட்டவை’ என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

