சூடானில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் மேலும் 40 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அங்கிருப்பதாக சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவிக்கின்றது.
நிர்க்கத்தியாகியுள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக மீட்டு நாட்டுக்கு அழைத்துவரும் நோக்கில் சவூதி அரேபிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் பி எம் ஹம்சா குறிப்பிட்டுள்ளார்.
சூடானில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 13 இலங்கையர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு ஜித்தா நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் அவர்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்தார்.
சூடானில் இருந்து இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக இந்தியாவின் உதவி கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சூடான் இராணுவம் மற்றும் துணை இராணுவத்திற்கிடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக இதுவரை 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வசே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

