அமெரிக்கா எதிர்காலத்தில் இலங்கையின் மேலும் பல அதிகாரிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமா?

மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து சர்வதேச அளவில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்கா தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் மதிப்பாய்வு செய்துவருகின்றது என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அமெரிக்கா உலகளாவிய ரீதியில் தனது அதிகாரத்தை பயன்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

வசந்தகரணாகொட போன்று எதிர்காலத்தில்  இலங்கையின் வேறு அதிகாரிகளும் தடைப்பட்டியலில் சேர்க்கப்படுவார்களா என ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளிக்கையில் அமெரிக்கதூதரக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அரசாங்க அதிகாரி மிகமோசமான ஊழல் அல்லது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என நம்பகதன்மை மிக்க தகவல் கிடைத்தால் அந்த அதிகாரியையும் அவரது குடும்பத்தினரையும் பிரிவு 7031 சியின் கீழ் இராஜாங்க செயலாளர் தடைப்பட்டியலில் சேர்ப்பார் என தூதரக பேச்சாளர்தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பாதிக்கப்பட்;டவர்களிற்கு நீதியையும் மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களிற்கு காரணமானவர்களிற்கு பொறுப்புக்கூறலையும் உறுதி செய்வது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது என பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *