சூடானில் நிர்க்கதிக்குள்ளான 13 இலங்கையர்கள் மீட்பு

சவுதி அரேபிய அரசாங்கத்தின் ஆதரவுடன் சூடானில் தங்கியிருந்த 13 இலங்கையர்கள் அங்கிருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

இலங்கையர்கள் சவுதி அரேபியாவின் JEDDAH நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 12 இலங்கையர்களை சூடானிலிருந்து வௌியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சூடானில் தொடர்ந்தும் தங்கியுள்ள இலங்கை பிரஜைகளை இந்தியா மற்றும் சவுதி அரேபியாவின் ஆதரவுடன் வௌியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எகிப்தின் நைரோவில் உள்ள தூதரகம், காடோன் நகரில் உள்ள கன்சியுலர் அலுவலகம், சூடான் அதிகாரிகள் மற்றும் காடோன் நகரில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றை தொடர்புகொண்டு இலங்கையர்களை பாதுகாப்பாக வௌியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சூடானில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பான தரவுகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு நைரோவிலுள்ள இலங்கை தூதரகத்தின் மின்னஞ்சல் முகவரி மற்றும் + 20 1272813000 என்ற தொலைபேசி இலக்கம் ஆகியவற்றினூடாக  தொடர்புகொகாள்ள முடியும்.

அத்துடன், காடோன் கன்சியுலர் அலுவலகத்தின் +24 9912394035 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *