நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று (24) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆகப் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போஇ பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

