முட்டைகளுக்கு விலை நிர்ணயம் : அதிவிசேட வரத்தமானி வெளியானது

முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை முதல் இப்புதிய விலைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய வெள்ளை நிற முட்டையொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் , ஒரு கிலோ கிராம் வெள்ளை முட்டையின் அதிக பட்ச சில்லறை விலை 880 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை பழுப்பு நிற முட்டையொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் , ஒரு கிலோ கிராம் பழுப்பு நிற முட்டையின் விலை 920 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள விலைகளை விட அதிக விலைக்கு உற்பத்தியாளர்களோ , விநியோகத்தர்களோ அல்லது வியாபாரிகளோ விற்பனை செய்யவோ அல்லது காட்சிப்படுத்தவோ முடியாது என்றும் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *