பெரும் சூறாவளி அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் மேற்கு அவுஸ்திரேலியா

மேற்கு அவுஸ்திரேலியாவை பெரும் சூறாவளி தாக்கும் ஆபத்து உருவாகியுள்ளது

இல்சா சூறாவளி இன்றிரவு அல்லது நாளை காலை மேற்கு அவுஸ்திரேலியாவின் போர்ட் ஹெட்லாண்ட் வலல் டவுன்ஸ் பகுதிகளிற்கு இடையில் கரையை கடக்கும் மிகவும் ஆபத்தானதாக மாறலாம்  category 5 என எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன.

தற்போது தென்பகுதியை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளcategory 4  இல்சா தென்கிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்து மேலும் வேகமானதாக மாறும்  என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 14 வருடங்களில் மேற்கு அவுஸ்திரேலியாவை தாக்கிய மிகவும் ஆபத்தான சூறாவளியாக இது காணப்படும்.

மரங்கள் விவசாயம் இயற்கைக்கு பெரும் சேதம் ஏற்படப்போகின்றது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உரியவிதிமுறைப்படி கட்டப்படாத வீடுகள் கடும் காற்றினால் பாதிக்கப்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *