போராட்டத்தில் ஈடுபடுவோர் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவர் -திஸ்ஸ விதாரண

உத்தேச பயங்கரவாத  எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தவுடன் உயர்நீதிமன்றத்தை நாடுவோம்.

திருத்தங்கள் இல்லாமல் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவார்கள் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

கொழும்பில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் 1979 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாக கொண்டு வரப்பட்டது.

பயங்கரவாதவாத தடைச்சட்டத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தன்மையில் உள்ள காரணத்தினால் பயங்கரவாத தடைச்சட்டம் ஆறு மாத காலத்தை வரையறுத்ததாக காணப்பட்டது.

நாட்டில் யுத்தச் சூழல் தீவிரமடைந்த பின்னணியில் இந்த சட்டத்தை மறுசீரமைக்க அவதானம் செலுத்தப்படவில்லை.

யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவு பெறும் பின்னணியில் தொடர்ந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்துவது பொறுத்தமற்றது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *