உயர்தர பரீட்சை நடைபெறும் தினம் குறித்த தகவல் வெளியானது!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை (2023 கல்வியாண்டுக்கான) எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று அதன் பின்னர் இலங்கையில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் உயர்தர பரீட்சைகள் குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்படாமல் தொடர்ந்தும் தாமதமாகி வருகின்றது. இந்நிலையில் அடுத்த மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உயர்தர பரீட்சைகள் நவம்பரில் இடம்பெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளை டிசம்பரில் நடைபெற வேண்டிய…

Read More

தரம் குறைந்த எரிபொருள் கொள்வனவோ விநியோகமோ இடம்பெறவில்லை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர

தரம் குறைந்த எரிபொருள் கொள்வனவோ விநியோகமோ நாட்டில் இடம் பெறவில்லை. அது தொடர்பில் ஊடகங்களில் வெளிவரும் செய்தியில் உண்மை இல்லை என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தரம் குறைந்த எரிபொருள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் குற்றச்சாட்டுக்களை…

Read More

இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த செவ்வாய்க்கிழமை, வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது அவரை துணை ராணுவப் படையினர் கைது செய்தனர். அவர்கள் இம்ரான் கானை மூர்க்கமாக இழுத்துச் சென்று காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அறக்கட்டளை முறைகேடு தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இம்ரான் கான் கைது சம்பவம்,பாகிஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அவரது…

Read More

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் கண்காணிப்பு கெமராக்கள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் பாதுகாப்பு கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் நீர் உட்புகாதவாறு மழை நீர் தடுப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கொட்டகையும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவாவின் பணிப்புரைக்கு அமைய, இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி பகுதியில் கொக்குளாய் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Read More

நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவி

நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் புதிய சீர்திருத்த செயற்பாட்டு வேலைத்திட்டத்திற்கும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கொள்ளளவை அதிகரிக்கும் வேலைத்திட்டத்திற்கு அவசியமான அறிவு மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி விருப்பம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வதிவிடத் தூதுக்குழுவின் பணிப்பாளர் டகாபுமி கடோனோ (Takafumi kadono) ஆகியோருக்கும் இடையில் நேற்று (05)…

Read More

பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பயன்படுத்துகின்றது – மன்னிப்புச்சபை கவலை

பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கரிசனை வெளியிட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் இலங்கை அரசாங்கம் புறக்கணிக்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. முகமட் அஸ்வர் முகமட் அனாஸ் முகமட் ஹபீர் ஜபீர் முகமட் சித்தீக் இராவுத்தர் மரீக்கார் ஆகிய நால்வரும் இலங்கை பொலிஸாரினால் மே 18ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்…

Read More

மீண்டும் இன்று கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் ஆணைக்குழு இன்று முற்பகல் மீண்டும் கூடவுள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.இச்சந்திப்பின் போதுஇ உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏற்பாடு செய்வதற்குத் தேவையான நிதி இதுவரை நிதியமைச்சினால் விடுவிக்கப்படாததைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளைஇ வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குமாறு கோரி மீண்டும் திறைசேரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணைந்துகொண்டுள்ளார். பொதுநலவாய செயலகத்தில் இந்த மாநாடு இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. 3ஆவது சாள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி, ஏனைய நாடுகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நீதிபதி சரவணராஜாவின் விடயத்தில் முழுமையான கரிசனை கொள்ளப்படும் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் பிரதம நீதியரசர் தெரிவிப்பு

நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக உண்மைகளை கண்டறிவது தொடர்பில் முழுமையான கரிசனை கொள்ளப்படும் என்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌவல்ய நவரத்ன தலைமையிலான நிறைவேற்றுக் குழுவினர் மற்றும் யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.தவபாலன் ஆகியோருக்கும், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று காலை நடைபெற்றிருந்தது. இந்தச் சந்திப்பின்போது, முல்லைத்தீவு மாவட்ட நீதிவான்…

Read More

பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்த கெஹெலிய!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு இன்று (07) நடைபெறும் பாராளுமன்றத்தின் புதிய அமர்வில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள கெஹெலிய ரம்புக்வெல்ல மறுப்புத் தெரிவித்துள்ளார்.அமைச்சுப் பதவி இல்லாத காரணத்தினால் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு பாராளுமன்ற அமர்வில் பின்வரிசை ஆசனம் ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடிக்கு தங்கம்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் திவ்யா சுப்பராஜு, சரப்ஜோத் சிங் ஜோடி தங்கப் பதக்கம் வென்றது. அஜர்பைஜானின் பாகு நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் திவ்யா சுப்பராஜு, சரப்ஜோத் சிங் ஜோடி தங்கப் பதக்கம் வென்றது. தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய ஜோடி, செர்பியாவின் ஜோரானா அருனோவிக், டாமிர் மைக் ஜோடியை எதிர்கொண்டது….

Read More