எதிர்வரும் 2023 ஐ.நா காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் (COP 28) 28 ஆவது கூட்டத்தில், பாதிக்கப்படக்கூடிய மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான காலநிலை நியாய மன்றத்தை (Climate Justice Forum) இலங்கை ஆரம்பிக்கத் தயாராக உள்ளது என்று சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
காலநிலை நீதியை உறுதிப்படுத்துதல், இழப்புகள் மற்றும் சேதங்களுக்கு நிதியளிப்பதை துரிதப்படுத்துவதற்கு பாரம்பரியமற்ற மாற்று அணுகுமுறையை பேணும் பொதுவான நோக்கத்துடன், காலநிலை நியாய மன்றம் (Climate Justice Forum) ஒன்றை நிறுவுவதற்கு இலங்கை முன்மொழிந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைகளுக்கு முன்னுரிமை அளித்து கலந்துரையாட அரசாங்கங்கள், அரசாங்கங்களுக்கிடையேயான நிறுவனங்கள் மற்றும் பிற தரப்பினர்களுக்கு தளத்தை வழங்கும் ஆசிய பசுபிக் அமைச்சர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகளின் ஐந்தாவது மன்றத்தை 2023 ஒக்டோபர் 03 முதல் 06 வரை கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத்திட்டத்துடன் இணைந்து சுற்றாடல் அமைச்சு, இதனை ஏற்பாடு செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

