ஜப்பானில் உள்ள அணுமின் நிலையங்களை மேலும் 30 ஆண்டுகள் நீட்டித்து செயல்படுத்த அந்த நாட்டின் நாடாளுமன்றம் சட்டம் நிறைவேற்றியுள்ளது.
பசுமை எரிசக்தி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவினை ஜப்பான் அரசு எடுத்துள்ளது. அதன்படி நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்கள் 30 ஆண்டுகள் இயக்கத்திற்கு பின் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மேலும் 30 ஆண்டுகள் இயங்கவிடப்படும்.

