4100 போதை மாத்திரைகளுடன் ரக்பி பயிற்சியாளர் ஒருவர் கைது

போதை மாத்திரைகளை தன்னகத்தே வைத்திருந்த பாடசாலை ரக்பி பயிற்சியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 4,100 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.  22 வயதுடைய குறித்த இளைஞன், கண்டி, அம்பத்தன்ன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

TIN இலக்கம் தொடர்பில் விசேட அறிவிப்பு!

ஒருவரது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக (TIN) மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். TIN இலக்கம் பெற்றுக்கொள்ளும் பொதுவான முறை வழமைப்போன்று இடம்பெறும் நிலையில்,    பொது மக்களுக்கு மிக எளிதாக இதனை வழங்குவது தொடர்பில் நேற்று (23)  இடம்பெற்ற ஜனாதிபதியின் செயலாளருடனான கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 15 மில்லியன்…

Read More

7 மீனவர்களுக்கு மரணத் தண்டனை!

கொழும்பு மேல் நீதிமன்றம் 7 மீனவர்களுக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு மீனவ படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Read More

ஆசிரிய உதவியாளர்களுக்குரிய நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் – வடிவேல் சுரேஷ்

ஆசிரிய உதவியாளர்களுக்குரிய நிரந்தர நியமனம் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தொடர்ந்தும் ஆசிரியர் உதவியாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல வருட காலமாக உதவி ஆசிரியர்களாக பணிபுரிந்தும் கூட அவர்களை நிரந்தர சேவையில் இணைக்காமல் இருப்பதினாலும் அவர்களுக்குரிய முறையான கொடுப்பனவு வழங்கப்படாமையினாலும் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். அரசாங்கமும் கல்வி அமைச்சும் ஒன்றிணைந்து உடனடியாக இதற்கு தீர்வு…

Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரசாரத்தை பல நாடுகளுக்கு விரிவுபடுத்தவுள்ளோம்! – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரசாரத்தை பல நாடுகளுக்கு விரிவுபடுத்தவுள்ளோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்தனர். வவுனியாவில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டுவரும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினர் போராட்டம் ஆரம்பித்து செவ்வாய்க்கிழமை (23) 7 ஆவது ஆண்டு நிறைவை அனுஷ்டித்தனர். இந்நிலையில் வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோதே சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் மற்றும் சங்க தலைவி கா.ஜெயவனிதா ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், காணாமல்…

Read More

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு அழைப்பு விடுக்கக்கோரி தமிழகத்திலிருந்து அமைச்சருக்கு கடிதம்

இந்திய பாரம்பரிய கத்தோலிக்க மீனவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபையானது கச்சத்தீவு பாரம்பரிய திருப்பயண குழுவுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்று எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா, தமிழ்நாடு – இராமநாதபுரம் கச்சத்தீவு பாரம்பரிய நாட்டுப்படகு திருப்பயண குழுவினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் மறை மாவட்ட ஆயர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இவ்வாறு கோரப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :…

Read More

ஓரிரு மாதங்களுக்குள் வடக்கு, கிழக்கில் பாரியளவில் காணிகள் விடுக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதன் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா 20 000 ஹெக்டயர்களுக்கும் மேற்பட்ட காணிகள் எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்கிழமை (23)  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மரக்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு விற்பனையின் போது 60 வீத இலாபம் கிடைக்கப்பெறுகிறது. ஆனாலும் சில இடைத்தரகர்களால்…

Read More

கிளிநொச்சியில் பஸ் – வேன் விபத்து ; ஒருவர் பலி ; 9 பேர் காயம்

கிளிநொச்சி ஏ.09 வீதியின் ஆனையிறவு பகுதியில் இன்று புதன்கிழமை (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் வரையில் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று  வீதியில் சென்று கொண்டிருந்த எருமை மாடுகளுடன் மோதியதுடன்  எதிரே வந்த கயஸ் வேனிலும் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது கயஸ் வாகனத்தில் பயணித்த ஒருவர் சம்பவ…

Read More

பெலியத்தையில் ஐவர் சுட்டுக்கொலை: விசாரணைக்கு 6 பொலிஸ் குழுக்கள்!

பெலியத்தை பிரதேசத்தில் இன்று (22) காலை ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 6 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.  தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழும் தென் மாகாண குற்றப் பிரிவு, தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு, தங்காலை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஆகியோரின் கீழும் இந்த பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்….

Read More

இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வுக்கு அழுத்தமளியுங்கள் : புதிய இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை

வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகான நிரந்தரமான தீர்வினை வழங்குவதற்கு அழுத்தமளிக்குமாறு இலங்கைக்கான இந்தியாவின் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தவைர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், வடக்கு,கிழக்கு மாகணங்களின் சபைகளுக்காகவாவது தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினை வலியுறுத்துமாறு கோரியதோடு, அதற்கு இலங்கை அரசாங்கம் நிதியில்லை என்று கூறுமாக இருந்தால் அந்நிதியை இந்தியா வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ்த்…

Read More