அரசியல் கைதிகளை சிறையில் சந்தித்த சாணக்கியன் !
இன்று (26) கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினர் மேற்கொண்டார். அதன் போது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வைத்துள்ள கைதிகளை நேரடியாக சந்தித்த பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த திடீர் சந்திப்புக்கான காரணம் சுமார் பத்து நாட்களுக்கு முன்னராக பிரதீபன் என்பவரை வெளியில் இருந்து வந்த சிறைச்சாலை பொலிஸ் அதிகாரிகள் என்று கூறப்படுபவர்கள் இவரை தாக்கியிருந்தார். அவரது நலனை விசாரிக்கும் நோக்கில் சென்றிருந்தேன். முக்கியமாக…

