ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபா மோசடி: பெண் கைது!
ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபா பண மோடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய பெண்ணாவார். இவர் ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி 250க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து 100 கோடி ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் பின்னர் அநுராதபுரம் , புத்தளம் மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில் தலைமறைவாகியிருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்….

