திருமலை மாவட்டத்தின் அனைத்து தெரிவுகளையும் மீள நடத்த வேண்டுமென சம்பந்தன் கிடுக்குப்பிடி : கிழக்கில் பிரசாரத்தினை ஆரம்பித்தார் சிறீதரன்
இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டத்திற்கான கிளைகளின் அத்தனை உறுப்பினர்கள் தெரிவினையும் மீண்டும் புதிதாக முன்னெடுக்க வேண்டும் என்று கட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவிடத்தில் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேநேரம், கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள கட்சியின் தலைமை வேட்பாளர்களின் ஒருவரான சிவஞானம் சிறீதரன் நேற்று முதல் மட்டக்களப்பில் பிரசார நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளார். இந்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான தெரிவு எதிர்வரும் 21ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளதோடு, வருடாந்த மாநாடு…

