ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவொன்றையும் இட்டிருந்தார்.  அந்தப் பதிவில் “கம்பாலா நகரில் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு முயற்சிகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொடர்ச்சியான வழிகாட்டுதல் பாராட்டத்தக்கது.  அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை…

Read More

சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர் : இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்தாகும்

இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கலந்துகொள்ளவுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், அம்மாதம் 3ஆம் திகதி தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுவிஸ் மற்றும் உகண்டா செல்வதற்கு முன்னர் சில முக்கிய சந்திப்புகளை நாட்டில் முன்னெடுத்திருந்தார். இதில் முக்கியமான ஒன்றாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின…

Read More

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் தேர்வுக்கான வாக்கெடுப்பு திருகோணமலை நகரசபை மண்டபத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும், கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டக்கிளைகளைகள் மற்றும், கொழும்புக்கிளை உள்ளிட்ட ஒன்பது மாவட்டக்கிளைப் பிரதிநிதிகள், மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்கள் இந்த தலைவர் தெரிவிற்கான வாக்கெடுப்பில் கலந்துகொண்டுள்ளனர். அந்தவகையில் வாக்கெடுப்பு இடம்பெறும் குறித்த நகரசபை மண்டபத்தின் வெளிப்புறமாக ஒவ்வொரு மாவட்டக்கிளை உறுப்பினர்களினதும், மத்தியகுழு உறுப்பினர்களதும் உறுப்புரிமை பரிசோதிசோதிக்கப்பட்டு, உறுப்புரிமை உறுதிப்படுத்தபின்னர் அவர்களுக்கான கட்சியின் அடையாள அட்டை வழங்கப்பட்டு வாக்கெடுப்பு…

Read More

வடக்கில் சுகாதாரம், கல்வி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவில் நிதி 

முன்னுரிமை அடிப்படையில் வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதன் கீழ் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு காணி ஒதுக்கீடு மற்றும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று (06) யாழ்.மாவட்டச் செயலகத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் தொடர்பில் இளைஞர் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்….

Read More

நீர் வழங்கல் பொறியியலாளர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில்

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் பொறியியலாளர்கள் சங்கம் சில தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவருடனான சந்திப்புகளில் பங்கேற்காமை, டெண்டர் மதிப்பீட்டுக் குழுக்களில் பங்கேற்காமை உள்ளிட்ட சில தொழிற்சங்க நடவடிக்கைள் கடந்த 05ஆம் திகதி காலை 8.30 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் தற்போது காலியாக உள்ள மேலதிக பொது முகாமையாளர் மேல், மேலதிக பொது முகாமையாளர் திட்டப்பணிகள் ஆகிய இரண்டு பதவிகளுக்கும் அவசரமாக ஆட்களை நியமிக்க வேண்டிய கட்டாயம்…

Read More

கட்டணம் செலுத்தாத 08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு

மின்கட்டணம் செலுத்த முடியாமல் கடந்த 03 காலாண்டுகளில் 08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த மின்வெட்டுகளில் பெரும்பாலானவை மிகவும் ஏழை மக்களின் இணைப்புகள் என்பது தெரியவந்துள்ளது. மின்வெட்டு காரணமாக குழந்தைகளின் ஊட்டச்சத்து முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கை உள்ளிட்ட பலவற்றை அவர்கள் இழந்துள்ளதாகவும், இதன்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலைமை காரணமாக எதிர்காலத்தில்…

Read More

பிரபல மருந்தகத்தின் ஊழியர் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த கும்பலை இலக்காக வைத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் பிரபல மருந்தகம் ஒன்றின் ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், மருந்தகத்தில் நேற்று (07) முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் வியாபார நோக்கத்துடன் 1,100 போதை மாத்திரைகளுடன் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் பிரபல மருந்தகத்தின் ஊழியர் என விசாரணையில் தெரியவந்தது. அதனடிப்படையில் மருந்தகத்தில் முன்னெடுக்கப்பட்ட…

Read More

புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை

புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை (09) நடைபெறவுள்ளது. பாராளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை கூடும் என சபாநாயகர் தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளைய தினம் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலக சட்டமூலம், தேசிய நீரியல் சட்டமூலம் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வர்த்தமானி இலக்கம் 2355/30 என்ற வர்த்தமானி பத்திரத்திற்கான உத்தரவுகள் விவாதத்திற்கு…

Read More

வடமாகாண வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு இரு மாதங்களில் தீர்வு : ஜனாதிபதி

வடமாகாண வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் எதிர்வரும் 02 வாரங்களில் வடக்கிற்கு விஜயம் செய்து இவ்விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும், வடமாகாண வர்த்தக சமூகத்தினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு செயலூக்கமான நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். யாழ்.மாவட்ட தொழில்துறையினர், மீனவர்கள் மற்றும் விவசாயிகளுடன் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை (06) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில்…

Read More

அகிலத்திருநாயகியை நேரில் சந்தித்து ஜனாதிபதி பாராட்டு

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரில் அழைத்து பாராட்டி  கௌரவித்து  மதிப்பளித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, வயது என்பது வெறும் இலக்கம் மட்டுமே என்பதை நிரூபித்து அகிலத்தை வென்ற அகிலத்திருநாயகிக்கு ஜனாதிபதி வாழ்த்துகளை தெரிவித்துகொண்டார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களுக்கு ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். இவருக்கு தேவையான ஏற்பாடுகளை…

Read More