20 வீதத்துக்கும் அதிகமானோர் நீரிழிவால் பாதிப்பு : 35 வயதுக்கு மேற்பட்டோரில் பலருக்கு உயர் இரத்த அழுத்தம் – ரமேஷ் பதிரண

இலங்கையில் 91வீத குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார்.  தட்டம்மை நோய் இந்நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த காலங்களில் தட்டம்மை நோய் மீண்டும் தலைதூக்கியதையடுத்து, இவ்வாறான தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே  கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த…

Read More

பொலிஸாரின் நடவடிக்கைகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுயாதீன விசாரணையை கோருகின்றது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

பொலிஸாரின் நடவடிக்கைகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. அரசாங்கம் இந்த விடயம் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் உன  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சிலநாட்களிற்கு முன்னர் நாரம்மலவில் இடம்பெற்ற சம்பவத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. குற்றச்செயல்களிற்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்படு;ம் விதம் குறித்து விமர்சனங்கள் வெளியாகியுள்ள போதிலும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அதனை தொடர்வதில் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…

Read More

இன்று முதல் கொழும்பில் CCTV நடைமுறை!

கொழும்பு பிரதேசத்தில் போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்ளும் சாரதிகளை சிசிடிவி கெமராக்கள் மூலம் அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் இன்று (22) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதன்படி இன்று முதல் வரும் 31 ஆம் திகதி வரை கொழும்பு நகரில் குறித்த திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டத்தின் ஊடாக போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

Read More

மின் கட்டண திருத்தம் குறித்த கலந்துரையாடல் இன்று!

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (22) கூடவுள்ளது. அண்மையில் இலங்கை மின்சார சபை கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்கியது. குறித்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துகளைப் பெற்ற பிறகு, பயன்பாட்டு ஆணைக்குழு தனது கருத்துக்களைச் சேர்க்கும். பின் 3 வாரங்களுக்கு பிரேரணை பகிரங்கப்படுத்தப்படும். அதன்பிறகு பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும். அதன் பின்னர் அனைத்து முன்மொழிவுகளையும் இணைத்து புதிய பிரேரணை…

Read More

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று

இந்தியாவில்  உத்தரபிரதேஸ் மாநிலத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெறும் நிலையில் ராமஜென்ம பூமியில் காலை முதல்  பல்வேறு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான பூஜைகள் கடந்த 16ஆம் திகதி தொடங்கின. 6 நாட்களாக பல்வேறு பூஜைகள் நடந்த நிலையில், 7ஆவது நாள் பூஜையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார்.  விழாவின் சிகர நிகழ்ச்சியான, ராமர் சிலை பிரதிஷ்டை அபிஜித் முகூர்த்த…

Read More

பெலியத்த துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சி தலைவரும் பலி

தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இன்று (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று(22) காலை 8.30 முதல் 8.40 மணிக்குள் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  உயிரிழந்தார். வெள்ளை நிற டிஃபென்டர் ரக வாகனத்தில் பயணித்த 5 பேரை இலக்கு வைத்து பச்சை நிற கெப் வண்டியில் வந்த சிலர்…

Read More

சபாநாயகருக்கு சஜித் அனுப்பிய கடிதம்!

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அடுத்த வாரம் 2 நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்ற உத்தேசித்துள்ளனர். இச் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் ஆராயப்பட்டபோது, இச் சட்டங்களில் 50% க்கும் மேலான பகுதிகள் சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் போது பொதுமக்களின் கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை, கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம், அரசியல் செய்யும் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை மற்றும் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன என சிவில்…

Read More

இந்திய பெருங்கடலின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்திய பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.

Read More

முட்டை விலை அதிகரிப்பு!

வற் வரி அதிகரிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டை ஒன்றின் விலை இன்று (21) முதல் 8 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி சதொச ஊடாக 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட முட்டை 43 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். கம்பஹா பிரதேசத்தில் இன்று (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார். சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு இல்லை…

Read More

ஈராக்கில் அமெரிக்க விமானப்படை தளத்தை இலக்குவைத்து ஏவுகணை தாக்குதல் – பல அமெரிக்க படையினர் காயம்

ஈராக்கின் மேற்கு பகுதியில் அமெரிக்க தளமொன்றை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் பல அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர். ஆசாட் விமானபடைதளம் மீது ஈரான் சார்பு குழுவினர் தாக்குதலை மேற்கொண்டனர் என அமெரிக்க குற்றம்சாட்டியுள்ளது. ஏவுகணைகளையும் ரொக்கட்களையும் பயன்படுத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. குறிப்பிடபடாத எண்ணிக்கையிலான அமெரிக்க படையினர் மூளை காயங்களிற்கு உட்பட்டுள்ளனரா என்ற மதிப்பீடுகள் இடம்பெறுகின்றன. ஈராக் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார். ஈராக்கில் உள்ள இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் என்ற அமைப்பே இந்த தாக்குதலை…

Read More