சம்பள நிர்ணய சபை கூட்டத்தில் ஜே.வி.பியின் தொழிற்சங்கம் பங்குபற்றுகிறது

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 10 ஆம் திகதி சம்பள நிர்ணய சபை கூடவுள்ளது. இதுகுறித்து தொழிலமைச்சின் செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்கு கிடைத்துள்ளது. இதன்போது, தாம் 2000 ரூபாவாக தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தி பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்துள்ளார். அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பது தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றமக்கள்…

Read More

மைத்திரிக்கு இடைக்காலத் தடையுத்தரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

சுகாதார அமைச்சின் அதிரடி தீர்மானம்

நாட்டினுள் போலி வைத்தியர்கள் மற்றும் போலி வைத்திய நிலையங்கள் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. போலி வைத்தியர்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவர்கள் மருத்துவ சபையில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பதோடு  தனியார் மருத்துவ நிறுவனங்கள் மாகாண மட்டத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப்படாத வைத்தியர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் பல இருப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக…

Read More

திடீர் விபத்துக்களால் வருடாந்தம் 10,000 பேர் பலி

திடீர் விபத்துக்களால் இலங்கையில் நாளாந்தம் 32 தொடக்கம் 35 வரையான மரணங்கள் பதிவாகின்றதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்திய நிபுணர்  சமிதா சிறிதுங்க தெரிவித்துள்ளார். ஒவ்வோர் ஆண்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீர் விபத்துக்களால் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வாகன விபத்துக்கள், நீரில் மூழ்குதல், விஷமாகுதல் போன்ற விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, ஏப்ரல் மாதத்தில்…

Read More