வெடுக்குநாறி தாக்குதல் சம்பவம் : தமிழர்கள் மீதான அப்பட்டமான திட்டமிடப்பட்ட கலாசாரப் பண்பாட்டு இன அழிப்பு – மணிவண்ணன் கண்டனம்
சிவ பக்தர்களுக்குரிய கவலைகள் நீங்கி, காரிய வெற்றியை தரக் கூடிய நாள் மகா சிவராத்திரி விரத நாளாகும். அந் நாளில் சிவாலயங்களில் பக்கத்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து ஓம் நமச்சியவாய என்று திரு நாமத்தை உச்சாடனம் செய்வார்கள். அவ்வாறே தமிழர்களின் மிகத் தொன்மையான வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்திலும் சிவபக்தவர்கள் ஒன்று கூடி சிவபெருமானுக்கு ஆராதனைகளைச் செய்தார்கள். அந் நேரத்தில் சிவபூஜையில் கரடி போல் உள்நுழைந்த பொலிசார் அங்கிருந்த சிவபகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி வலுக்கட்டயமாக வெளியேற்றியதோடு…

