சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட,  சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை வெள்ளிக்கிழமை (23.02.2024) அனுப்பியுள்ளது. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-ல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டாா். அதன் பின்னா், அவா் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தாா். இலங்கை தமிழரான சாந்தனுக்கு ஜன. 24-ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் திருச்சி அரசு…

Read More

கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞன் மாயம்!

தங்காலை, மாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தங்காலை  பொலிஸார் தெரிவித்தனர்.  பெலியத்தை, தெமட்டாவை பகுதியைச் சேர்ந்த  24 வயதுடைய இளைஞனே கடலில் மூழ்கி காணமல் போயுள்ளார்.  காணாமல் போன இளைஞனைத்  தேடும்  நடவடிக்கையை தங்காலை கடற்படையின் சுழியோடல் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். மாவெல்ல பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்த அவர் பலருடன் கடலில் நீராடும் போது அலையில் அள்ளுன்டு  செல்லப்பட்டுக் காணாமல் போனதாக…

Read More

ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபா மோசடி: பெண் கைது!

ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபா பண மோடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய பெண்ணாவார். இவர் ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி 250க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து 100 கோடி ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் பின்னர் அநுராதபுரம் , புத்தளம் மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில் தலைமறைவாகியிருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்….

Read More

சுமார் 1500 சிறுவர்கள் சிறைச்சாலையில்

சிறைச்சாலையில் உள்ளவர்களில் 65 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என  சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார். அதேபோல், போதைப்பொருள் குற்றங்களுக்காக 1000 முதல் 1500 வரையான சிறுவர்கள் சிறைச்சாலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காலி நாகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது சிறைச்சாலை ஆணையாளர்  ஜகத் சந்தன வீரசிங்க இதனை தெரிவித்தார்.

Read More

மின் கட்டண திருத்த யோசனை இன்று ஆணைக்குழுவிடம்

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இன்று (22) பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார சபையால் ஈட்டப்படும் இலாபத்தை நுகர்வோருக்கு வழங்கும் நோக்கில் இது தொடர்பான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படுவதாக அதன் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண திருத்தத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணம், இந்த புதிய கட்டண திருத்தத்தில் முற்றாக நீக்கப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளதாக…

Read More

சனத் நிஷாந்தவின் மரணம் கொலையா ? விபத்தா ? பாரிய சந்தேகம் எழுகிறது என்கிறார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம்  கொலையா? அல்லது விபத்தா? என்பதில் சந்தேகம் உள்ளது.குற்றப்புலனாய்வுத் திணைக்களம் துரிதகரமான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும். சனத் நிஷாந்தவை போன்று அரசியல்வாதிகள் அனைவரும் இறக்க வேண்டும் என 3 பேரை கொண்டவர்கள் கருதுகிறார்கள் என  ஆளும் தரப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவுக்கான அனுதாப பிரேரணையில் உரையாற்றுகையில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Read More

சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் வியாழக்கிழமை (22) ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டமானது வெள்ளிக்கிழமை (23) மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த போராட்டமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இடம்பெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

Read More

மக்களே அவதானம் ! வெப்பமான வானிலை மேலும் சில மாதங்களுக்கு தொடரும்

கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விட அதிக உஷ்ணம் எதிர்பாரக்கப்படுவதாகவும், இந்த நிலைமை எதிர்வரும் சில மாதங்களுக்கு தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, புத்தளம், குருநாகல், அம்பாந்தோட்டை,அநுராதபுரம், பொலன்னறுவை, மற்றும்  திருகோணமலை ஆகிய 8  மாவட்டஙகளுக்கே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மனித உடலால் தாங்கிக் கொள்ளக்கூடிய வெப்பத்தை விட அதிக உஷ்ணம் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை…

Read More

தொழுநோயை கட்டுப்படுத்த இலங்கைக்கு வருகை தரவுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் வைத்திய குழு

தொழுநோயை முற்றாக கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட வைத்திய குழுவொன்று எதிர்வரும் மார்ச் மாதம் நாட்டிற்கு வருகை தரவுள்ளது. நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் தொழுநோயை முற்றாக  கட்டுப்படுத்துவதற்கான  வரைப்படத்தை உருவாக்க  இந்த குழு சுகாதார அதிகாரிகளுக்கு உதவும் என  தொழுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் தொழுநோயாளிகளின்  அதிகரித்துள்ளதாக தொழுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசான் ரணவீர தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து தொழுநோயை முற்றாக கட்டுப்படுத்தற்கான விரிவான வேலைத்திட்டத்தை நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்….

Read More

மாகாண சபைகளிலிருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்க யோசனை

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் யோசனை சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளார். 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளில் இருந்து பொலிஸ் அதிகாரங்கள் அகற்றப்பட வேண்டுமென அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

Read More