திருமலை 5 மாணவர் படுகொலை விவகாரம் : 18 வருடங்கள் கடந்தும் நீதி நிலைநாட்டப்படவில்லை : சர்வதேச மன்னிப்புச்சபை விசனம்

திருகோணமலை 5 மாணவர் படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 18 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அதுகுறித்து உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை விசனம் வெளியிட்டுள்ளது. செவ்வாய்கிழமையுடன் (2) ‘திருகோணமலை 5 மாணவர் படுகொலை’ இடம்பெற்று 18 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி திருகோணமலை நகரில் 5 தமிழ் மாணவர்கள் பாதுகாப்புப்படையினரால் கொல்லப்பட்டனர். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, திருகோணமலை…

Read More

வரி அதிகரிப்பை வர்த்தகர்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது : திறைசேரியின் செயலாளர் வேண்டுகோள்

இவ்வாண்டு முதல் அமுலுக்கு வந்திருக்கும் பெறுமதிசேர் வரி (வற்வரி) அறவீடானது வருமானத்தை அதிகரிப்பதையும், வரவு – செலவுத்திட்டப் பற்றாக்குறையை ஓரளவுக்கு சாதகமான மட்டத்தில் பேணுவதையுமே நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. சில வர்த்தகர்கள் பெறுமதிசேர் வரி விதிக்கப்படாத பொருட்களின் விலைகளையும் அதிகரித்து இச்சூழ்நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. மக்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவ்வாறு செயற்படவேண்டாம் என்று வர்த்தகர்களிடம் கேட்டுக்கொள்வதாக நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார்.   இவ்வாண்டு முதல் அமுலுக்குவரும் பெறுமதிசேர் வரி…

Read More