பெலியத்தையில் ஐவர் சுட்டுக்கொலை: விசாரணைக்கு 6 பொலிஸ் குழுக்கள்!
பெலியத்தை பிரதேசத்தில் இன்று (22) காலை ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 6 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழும் தென் மாகாண குற்றப் பிரிவு, தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு, தங்காலை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஆகியோரின் கீழும் இந்த பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்….

