உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் பூதவுடல் அவரது இல்லத்தில்

விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் சற்று முன்னர் புத்தளம் ஆராச்சிக்கட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பொரளை ஜயரத்ன மல்சாலையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வீதியின் இருமருங்கிலும் பெருந்தொகையான மக்கள் திரண்டுள்ளதாகவும், இல்லத்திலும் பெருமளவான மக்கள் திரண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்கள் மற்றும் பலர் நேற்று (25) இரவு பொரளை ஜயரத்ன மல்சாலைக்கு…

Read More

சமரி அத்தபத்துவுக்கு சிறந்த வாய்ப்பு!

2024 மகளிர் பிரிமியர் லீக்கில் பங்கேற்கும் வாய்ப்பை சமரி அத்தபத்து பெற்றுள்ளார். அதன்படி ‘UP Warriorz’ அணியில் இணைந்து கொள்ள அவருக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. Lauren Bell க்கு பதிலாக சமரி அணிக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

அரசியல் கைதிகளை சிறையில் சந்தித்த சாணக்கியன் !

இன்று (26) கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினர் மேற்கொண்டார்.  அதன் போது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வைத்துள்ள கைதிகளை நேரடியாக சந்தித்த பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த திடீர் சந்திப்புக்கான காரணம் சுமார் பத்து நாட்களுக்கு முன்னராக பிரதீபன் என்பவரை வெளியில் இருந்து வந்த சிறைச்சாலை பொலிஸ் அதிகாரிகள் என்று கூறப்படுபவர்கள் இவரை தாக்கியிருந்தார்.  அவரது நலனை விசாரிக்கும் நோக்கில் சென்றிருந்தேன். முக்கியமாக…

Read More

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டது! 

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணியின் திடீர் மரணம் பலருக்கும் அதிர்ச்சி கலந்த சோத்தை ஏற்படுத்தியுள்ளது. துரதிர்ஷ்டவசமான இந்த இழப்பின் காரணமாக ஜனவரி 27ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவிருந்த இளையராஜாவின் “என்றும் ராஜா ராஜாதான்” இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டுள்ளது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் மேலும் தெரிவிக்கையில், இந்த நிகழ்ச்சிக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த இளையராஜா…

Read More

சுதந்திரமான காற்றை சுவாசிக்க முடியாத கட்டத்தில் இருக்கிறோம்!

தமிழ் மக்கள் பெற்ற துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு அச்சத்தில்  மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக்  கட்சியின் புதிய   தலைவராக கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்  கடந்த 21 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து  மன்னார்…

Read More

IMF இன் பணிப்பாளரை இலங்கைக்கு அழைக்க தயார்!

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளரை நாட்டுக்கு அழைக்க தான் தயாராக இருப்பதாகவும், மாற்றும் யோசனைகள் இருக்கும் பட்சத்தில் அது தொடர்பில் கலந்துரையாட முன்வருமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.  கொழும்பு சுங்கத் தலைமையகத்தில் இன்று (26) நடைபெற்ற சுங்கத் தின நிகழ்வில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, வாக்குறுதி அரசியலே நாட்டின் பொருளாதாரத்தை அழிவுக்கு இட்டுச் சென்றது எனவே, தேர்தல் ஒன்றுக்கு தயாராகும் அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டின் முன்னேற்றத்திற்கான…

Read More

அபிவிருத்தி என்ற பெயரில் இலங்கை வரை படத்தில் இருந்து மன்னார் தீவை முற்றாக அழிக்க முயற்சி

மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் பிரஜைகள் குழு   ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (26) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது. மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மார்க்கஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற  குறித்த விழிப்புணர்வு பேரணியின் போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,மத தலைவர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். -மன்னார்…

Read More

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்த நெல்லியடி இளைஞன் மீது வாள் வெட்டு!

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞனை வீதியில் வழி மறித்து சிலர் அவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை சேர்ந்த ஜெயக்கொடி கார்தீபன் (30)  எனும் இளைஞனே தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  குறித்த இளைஞன் நேற்று (25) மாலை  ஐஸ்கிறீம் விற்பனையில்  ஈடுபட்டிருந்த போது , மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், ஐஸ் கிறீம் வாங்குவது போல நடித்து  இளைஞனிடமிருந்த  பணம்…

Read More

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் : நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களை அரசாங்கம் உள்வாங்கவில்லை – ஐக்கிய மக்கள் சக்தி

சபாநாயகர் நிகழ்நிலைபாதுகாப்பு சட்டத்திற்கு தனது அங்கீகாரத்தை வழங்குவதற்கு முன்னர் கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது. உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள்  சிலவற்றை அரசாங்கம் உள்வாங்கவில்லை என்பதால்  நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில் சபாநாயகர் கட்சிதலைவரின் கூட்டத்தினை கூட்டவேண்டும் என வேண்டுகோள் விடுக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கியமக்கள் சக்தியின் ஹர்சனராஜகருண தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றம் முன்வைத்த பரிந்துரைகளை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் உள்வாங்கவில்லை என்பதால் சபாநாயக அந்த சட்டத்தினை அங்கீகரிக்க கூடாது எனவும் ஐக்கிய…

Read More

யுக்தியவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டிய இனந்தெரியாதவர்கள் – கொள்ளுப்பிட்டியில் சம்பவம்

கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபேர்ட்டிசுற்றுவட்டத்தில் நேற்று மாலை யுக்திய நடவடிக்கைக்கு எதிராக இடம்பெற்றுக்கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்தினை இனந்தெரியாத நபர்கள் குழப்பியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை துன்புறுத்தி மிரட்டும் இனந்தெரியாத நபர்கள் ஆர்ப்பாட்டத்தினை கைவிடுமாறு மிரட்டுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தனது முகத்தை மூடிய நபர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நபர்ஒருவரை தாக்குவதை வீடியோ காண்பித்துள்ளது. இனந்தெரியாத நபர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் காணமுடிந்துள்ளது.

Read More