கந்தக்காடு சம்பவங்களை தீர்க்க அவசர வேலைத்திட்டம்!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முரண்பாடான சம்பவங்களை கட்டுப்படுத்த அவசர வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல்காரர்களும் புனர்வாழ்வு நிலையங்களில் அனுமதிக்கப்படுவதே இது தொடர்பான முரண்பாடுகளுக்கு பிரதான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனவரி மாதத்தில் 2 தடவைகள் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகளுக்கு இடையில் மோதல் சம்பவங்கள் பதிவாகின. தற்போது நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனினும் இதற்கு நீண்டகால தீர்வு காணப்பட வேண்டுமெனவும் புனர்வாழ்வு ஆணையாளர்…

Read More

பெண்களுக்கு தொந்தரவு செய்தால் – 109 க்கு அழைக்கவும்!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். வெயாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் ‘யுக்திய’ வேலைத்திட்டத்துடன் இணைந்து நடத்தப்படும் சமூக பொலிஸ் உறுப்பினர்களுக்கு தௌிவுபடுத்தும் மற்றுமொரு கட்டம் வெயங்கொடை பொலிஸை மையப்படுத்தி நடைபெற்றது. பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும்…

Read More

கடத்தப்பட்ட படகை மீட்க தீவிர முயற்சி

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட  லோரென்சோ புதா 4  நெடுநாள் படகை விடுவிப்பதற்காக பஹ்ரைனில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கூட்டு கடற்படையின் ஆதரவை இலங்கை கடற்படை கோரியுள்ளது. அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் குறித்த படகு கடத்தப்பட்டுள்ளதுடன் அதில் 6 பேர் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More

இலங்கை மீனவர்கள் 13 பேர் கைது

மாலைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்கள் பயணித்த 02 மீன்பிடி படகுகளையும் அந்நாட்டு கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர். ஒரு கப்பலில் 7 மீனவர்களும், மற்றொரு கப்பலில் 6 மீனவர்களும் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த இரண்டு மீன்பிடி படகுகளும் கடந்த 25ஆம் திகதி பொறுப்பேற்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு படகுகளும் தற்போது ஹா அலிஃப் ஃபில்லதூ துறைமுகத்தில் நங்கூரமிட்டு, நூராதீன் என்ற கடலோர  பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிநாட்டு…

Read More

சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியை இன்று

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று (28) பிற்பகல் நடைபெறவுள்ளன. இன்று பிற்பகல் 01.00 மணியளவில் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் ஆரம்பமாகவுள்ளன. இராஜாங்க அமைச்சரின் பூதவுடல் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு அருகில் உள்ள தற்காலிக மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிற்பகல் 01.00 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இறுதிச் சடங்குகளின் பின்னர், உடல் ஊர்வலமாக…

Read More

கிராம உத்தியோகத்தர் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகின

வெற்றிடமான கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்காக பரீட்சை திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரகாரம் நேர்முகப்பரீட்சைக்குத் தகுதி பெற்ற 4,232 பேரின் பட்டியல் இன்று (27) வெளியிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moha.gov.lk இல் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் பரீட்சை முடிவுகளின்படி 2002 கிராம அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடைபெறவுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நேர்முகத் தேர்வுகள் விரைவில் நடத்தப்பட்டு, அவர்கள் அரச சேவைக்குள்…

Read More

கோர விபத்தில் மூவர் பலி

குருநாகல் – கிரிஉல்ல பிரதான வீதியின் கிவுல்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்தனர். லொறியொன்றும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read More

இளையராஜாவின் மகள் பவதாரணியின் பூதவுடல் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது : சகோதரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை வந்த யுவன்

மறைந்த பின்னணி பாடகியான பவதாரணியின் பூதவுடல் நேற்று (26) பிற்பகல் 1.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து  ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் UL 127 என்ற விமானத்தினூடாக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.  இசைஞானி இளையராஜாவின் மகளும், மறைந்த பின்னணி பாடகியுமான பவதாரணியின் பூதவுடலை பார்ப்பதற்காக அவரின் சகோதரரும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தமிழ் திரைப் பிரபலங்கள் நேற்று இலங்கை வந்தனர் நேற்று பகல் பவதாரணியின் உடல் கொழும்பு ஜயரத்ன மலர்ச்சாலையில்…

Read More

அல்கைதாவுக்கு உதவிய இலங்கையர் நால்வருக்கு சிவப்பு பிடியாணை!

அல்கைதா  அமைப்புக்கு உதவியதாக கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசிங்க இன்று (26) ஆங்கிலத்தில் சிவப்பு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.  பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் கோரிக்கைக்கு அமைவாக இந்த சிவப்புப் பிடியாணையை பிறப்பித்துள்ளனர். கள்எலிய கலகெடிஹேன பிரதேசங்களைச் சேர்ந்தவர்களான தற்போது அவுஸ்திரேலியா மற்றும் சிரியாவில் வசிக்கும் நால்வருக்கே இந்த சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Read More

சனத் நிஷாந்தவின் சாரதிக்கு விளக்கமறியல்!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி  கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெலிசர நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி  ஆகியோர் பலியான சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.

Read More