இன்று முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!
76 வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் ஒத்திகை நடவடிக்கை காரணமாக இன்று (30) முதல் கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், சுதந்திர தின கொண்டாத்திற்காக 3ம் திகதி மதியம் 2 மணி முதல் 4ம் திகதி சுதந்திர தின விழா நிறைவடையும் வரையிலும் இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுலில் இருக்கும்…

