சீனாவின் அடுத்த ஆராய்ச்சி கப்பலிற்கு அனுமதி மறுத்தது இலங்கை

இலங்கை கடற்பரப்பில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு தனது மற்றுமொரு கப்பலிற்கு அனுமதி வழங்கவேண்டும் என சீனா விடுத்த வேண்டுகோளை இலங்கை ஏற்கமறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெயர் குறிப்பிடவிரும்பாத சிரேஸ்ட அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். சீனாவின் மற்றுமொரு நவீன ஆராய்ச்சிகப்பலான சியாங் ஜாங் ஹொங் 3 ஜனவரி மாதம் முதல் மே மாதம் முதல் இந்து சமுத்திரத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளது இலங்கை மாலைதீவு கடற்பரப்பில் இந்த கப்பல் ஆராய்ச்சிகளில் ஈடுபடும். இலங்கை மாலைதீவிடம் சீனா அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. இதேவேளை…

Read More

பாடசாலைகளில் தஞ்சமடைந்த கிளிநொச்சி மக்கள்

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில், கண்டாவளை பிரதேசத்தில் 321 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 96 குடும்பங்கள் பாடசாலையில் தஞ்சமடைந்துள்ளது. அவர்களுக்கான சமைத்த உணவுகள், அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. உப தபாலகம் உள்ளிட்ட பொது மக்கள் சேவை நிலையங்களும் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய  சீரற்ற வானிலையால் 1,661 குடும்பங்களை சேர்ந்த 5,204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது….

Read More

PTA கைதிகள் 4 பேருக்கு பிணை வழங்க நடவடிக்கை!

மாவீரர் தின நிகழ்வின் போது வவுனதீவில் வைத்து கைது செய்யப்பட்ட உயர்தர மாணவன் நியுட்டன் டனுசனுக்கு பிணை வழங்க கூடிய சாத்தியம் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த மாணவனை நாளைய தினம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று பிணை வழங்க படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின் படி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு…

Read More

2,166 சந்தேகநபர்கள் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களில் 66 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 14 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் 226 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 1 கிலோ 370 கிராம் ஹெரோயின், 556 கிராம் ஐஸ், 7 கிலோ 800 கிராம் கஞ்சா, 3 கிலோ 500 கிராம்…

Read More

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 100 க்கும் மேற்பட்டோர் பலி!

சீனாவின் வடமேற்கு பகுதியில் 6.2 ரிக்டரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 220 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  கன்சு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. கிங்காய் மாகாணத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்து உள்ளதாக கள தகவல் வௌியாகியுள்ளது. ​நேற்றிரவு  நிலநடுக்கம் அங்கு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இதனால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகளில் விரிசல் போன்ற பாதிப்புகள்…

Read More

24 மணித்தியாலங்களில் 2,121 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 2,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்களில் 12 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும், 5 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 133 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விஷேட பணியகத்தின்…

Read More

எந்தவொரு தரப்பினருக்கும் எம்மால் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது; ஜப்பான், தென்னாபரிக்கா, சுவிட்சர்லாந்து இராஜதந்திரிகள் தெரிவிப்பு 

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை ஸ்தாபிக்கும் முயற்சியில் நாம் அரசாங்கத்துக்கோ பாதிக்கப்பட்ட தரப்பினருக்கோ அல்லது அதன் பிரதிநிதிகளுக்கோ அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என்று ஜப்பான், தென்னாபிரிக்கா, சுவிட்சர்லாந்து இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கிற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, சுவிட்சர்லாந்து தூதுவர் சிரி வொல்ட் மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்டில் ஷால்க் ஆகியோருக்கும் தமிழ் கட்சிகளின் வடமாhகணத்தைச் சேர்ந்த ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் இரவு யாழில் உள்ள தனியார் விடுதியில்…

Read More

கனடாவில் கென்சவேர்ட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால்- இலங்கையில் இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக தடைகள்

கனடாவில் கென்சவேர்ட்டிவ் கட்;சி ஆட்சியமைத்தால் சர்வதேச நீதிமன்றத்தில்  இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக நாங்கள் கனடாவின் வெளிவிவகார அமைச்சின் சட்டத்தரணிகளை பயன்படுத்துவோம்,என கட்சியின் தலைவர் பியர் பொலியர் தெரிவித்துள்ளார் கனடாவின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் கனடாவில் கென்சர்வேட்டிவ் கட்சி  ஆட்சியமைத்தால் தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பில் என்ன நிலைப்பாட்டை எடுக்கவுள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 1980களில் கனடாவிற்கு பெருமளவு புலம்பெயர்ந்த தமிழர்களை முதலில் வரவேற்றவர் கென்சவேர்ட்டிவ் கட்சியின் அப்போதைய பிரதமர் பிரையன் …

Read More

சாதனை படைத்த ஈழத்து சிறுமி கில்மிசா

தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் “சரிகமபா” சிறுவர்களுக்கான  பாடல் போட்டியில்  உதயசீலன் கில்மிசா வெற்றிப்பெற்றுள்ளார். இந்நிகழ்ச்சியானது நேற்று (17) ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் அரியாலையிலிருந்து  கில்மிஷா மற்றும் கண்டி, புஸ்ஸல்லாவை நயப்பனவிலிருந்து அசானி ஆகிய இருவரும் கலந்து கொண்டிருந்த நிலையில் இறுதிச்சுற்றுக்கு கில்மிஷா தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில், பிரமாண்டமான இறுதிச்சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட இளம் பாடகர்கள் ஆறுப்பேரில் வெற்றிப் பெற்ற கில்மிஷாவிற்கு இந்திய மதிப்பில் 10 இலட்சம் ரூபாய் காசோலை கொடுக்கப்பட்டிருக்கிறது. கில்மிசா யாழ்ப்பாணத்தில் இருப்பதோடு…

Read More