பண்டிகைக் காலங்களில் தடையில்லா மின்சாரம்
எதிர்வரும் வார விடுமுறை நாட்களில் மின்வெட்டை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அவசர பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதைத் தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். பராமரிப்பு பணிகளுக்காக மின் இணைப்பை துண்டிப்பது தொடர்பாக சர்வதேச வழிகாட்டுதலின்படி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்படுவதாக மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வார…

