மியன்மாரில் இருந்து தப்பிய மூவர் சி.ஐ.டியில் வாக்குமூலம்
மியன்மாரில் உள்ள முகாம் ஒன்றில் பயங்கரவாத அமைப்பினால் 56 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைக்கப்பட்டு இணைய அடிமைகளாகப் பணியமர்த்தப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், முகாமில் இருந்து தப்பி நேற்று (24) இலங்கை திரும்பிய ஐவரில் மூவர் வர்த்தக, ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வாக்குமூலம் வழங்க வந்தனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மியன்மாருக்கு தரவு செயற்பாட்டாளர்களாக சென்ற நான்கு இளைஞர்கள் மற்றும் ஒரு இளம்பெண் அடங்கிய குழு, பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பி…

