இலங்கை வரும் ஜப்பானிய நிதியமைச்சர்

ஜப்பானிய நிதியமைச்சர் Shunichi Suzuki உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அவர் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜப்பானிய நிதியமைச்சர் கலந்துரையாட உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Read More

சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக தையிட்டியில் தொடரும் போராட்டம்!

தையிட்டியில் தமிழர்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையைினை அகற்றுமாறு கோரி இரண்டாவது நாளாக இன்றும் செவ்வாய்க்கிழமை (26) போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டத்தில் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டிபன் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

Read More

யாழ். பல்கலை மாணவி உயிரிழப்பு – அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு

யாழ்ப்பாண பல்கலை மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி மருந்தின் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து உயிரிழந்த மாணவியின் உறவினர்களால் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். உயிரிழந்த பெண்ணுக்கு எவ்விதமான ஒவ்வாமையும் இல்லை எனவும் செலுத்தப்பட்ட ஊசி மருந்து என்னவென்பது தமக்கு தெரிவிக்கப்படவில்லை என பொலிஸாருக்கான…

Read More

மன்னார் – யாழ். பிரதான வீதியில் தனியார் பேருந்து மோதி 8 மாடுகள் பலி

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி  நாயாத்துவழி  பகுதியில்  நேற்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன்  அதி வேகமாக பயணித்த  தனியார் பேருந்தே நாயாத்து வழி பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த மாடுகளின் மீது மோதியுள்ளது. குறித்த விபத்தில் கூட்டமாக சென்ற மாடுகளில் 8 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு பல மாடுகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளது. மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள…

Read More

கொழும்பில் இருந்து புறப்பட்ட சுனாமி ரயில்!

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி பெரேலிய புகையிரத நிலையத்தில் சுனாமி அனர்த்தத்தில் சிக்கிய புகையிரத பயணிகள் மற்றும் புகையிரத ஊழியர்களை நினைவுகூரும் வகையில் இன்று (26) காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பெலியத்த வரை புகையிரதம் ஒன்று இயக்கப்பட்டுள்ளது. காலை 6.25 மணிக்கு மருதானை நிலையத்தில் இருந்து புறப்பட்ட புகையிரதம் 6.50 மணிக்கு கொழும்பு கோட்டை நிலையத்தில் இருந்து புறப்பட்டது. 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தில் சிக்கிய…

Read More

இலங்கையில் கொவிட் 19 – ஜே.என்.-1 பிறழ்வு குறித்து சுகாதார அமைச்சின் விளக்கம்

உலகின் பல நாடுகளிலும் கொவிட் வைரஸின் துணை பிறழ்வான ஜே.என்.-1 பரவல் அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கையில் இதன் நிலைமை குறித்து அறிந்து கொள்வதற்காக பிரதான வைத்தியசாலைகளிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் எந்த மாதிரியிலும் கொவிட் தொற்று இனங்காணப்படவில்லை என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனவே ஜே.என்.-1 பிறழ்வினால்  ஏற்படக் கூடிய பொது சுகாதார அச்சுறுத்தல் குறைவாகவே காணப்படுவதாகவும், எவ்வாறிருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொவிட் தொற்றை இனங்காண்பதற்கான பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார…

Read More

இலங்கை – நேபாளத்துக்கு இடையில் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை – நேபாள கூட்டு ஆணைக்குழுவின் வெளிவிவகார அமைச்சர்கள் மட்ட அமர்வின் ஓரங்கமாக இருநாடுகளுக்கும் இடையில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டள்ளது. வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான இலங்கை – நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வு கடந்த 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் காத்மண்டுவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் நாராயண் பிரகாஷ் சவுத்துடன்…

Read More

‘என்ன நேர்ந்தது’ என்று தேடிய ஆணைக்குழுக்கள்’ யார் அதனை செய்தது எனக் கண்டறியவில்லை – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம்

இலங்கையில் கடந்தகாலங்களில் நியமிக்கப்பட்ட அனைத்து ஜனாதிபதி ஆணைக்குழுக்களும் ‘என்ன நேர்ந்தது’ என்பதைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டனவே தவிர, அவை ‘யார் அதனைச் செய்தது’ என்பதைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், எனவே தற்போதைய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் அதனை ஒத்த நடவடிக்கையா எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் முயற்சிகள் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரதும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், இதுகுறித்து யஸ்மின்…

Read More

மீண்டும் குடும்ப ஆட்சியையோ, பரம்பரை ஆட்சியையோ மக்கள் ஏற்படுத்தி விடக்கூடாது – விஜயதாச ராஜபக்ஷ

நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய தலைமைத்துவத்தை தெரிவு செய்யும் முக்கிய பொறுப்பு அடுத்த வருடம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. எனவே குடும்ப ஆட்சியையோ, பரம்பரை ஆட்சியையோ மீண்டும் தோற்றுவிக்காமல் மக்கள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்று நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் துயரங்களையும், நெருக்கடிகளையுமே அனுபவித்து வருகின்றனர். தவறான ஆட்சியாளர்களிடம் நாட்டை ஒப்படைத்ததன் காரணமாகவே அனைத்து…

Read More

தற்காலிகமாக மட்டுப்படுத்தப்படும் யுக்திய சுற்றிவளைப்பு

பண்டிகை காலத்தை கருத்தில்கொண்டு யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிறிஸ்தவ தேவாலயங்களை அண்மித்த பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காரணத்தினால்  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார். எவ்வாறாயினும், பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, யுத்திய சுற்றிவளைப்பில் கடந்த 06 நாட்களில் 12,132 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 8 கிலோவிற்கும்…

Read More