வட, கிழக்கில் இந்து, முஸ்லிம் வணக்கத்தலங்களை அபகரிப்பதற்கு வசதி ஏற்படுத்துகிறது தொல்பொருள் திணைக்களம் – சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டு
தொல்பொருள் திணைக்களமானது நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் அப்பிரதேசங்களிலுள்ள கட்டமைப்புக்கள் மற்றும் பௌத்த பிக்குகளுடன் இணைந்து இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் வணக்கத்தலங்களைக் கைப்பற்றுவதற்கு வசதி ஏற்படுத்துகின்றது என சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேவேளை, நாட்டில் வாழும் சிறுபான்மையின இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கான மீயுயர் மத சுதந்திரத்தை உறுதிசெய்யும் வகையில் அரசாங்கமானது தற்போது நடைமுறையிலுள்ள ‘ஒடுக்குமுறை’ கொள்கைகள் மற்றும் சட்டங்களை முற்றாக நீக்கவோ அல்லது திருத்தியமைக்கவோ நடவடிக்கை எடுக்கவேண்டும்…

