கிரிக்கெட்டை கட்டியெழுப்ப திறைமையானவர்களோடு நேர்மையாக ஒன்றிணைவோம் – எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

நாட்டின் 220 இலட்சம் மக்களுடன் இணைந்த கிரிக்கெட் விளையாட்டின் தற்போதைய ஊழல், திறமையற்ற மற்றும் ஒழுங்கற்ற நிர்வாகம் முடிவுக்கு வந்து சாதகமான மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாகவும், நாட்டிற்கும் விளையாட்டுக்கும் அதிக நன்மை பயக்கும் வகையில் மாற்றத்தை உகந்ததாகவும் அறிவார்ந்த முறையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.   கிரிக்கெட்டின் அடிமட்டமான பாடசாலைகள், சங்கங்கள், மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களின் வசதி வாய்ப்புகளுக்காக கிரிக்கெட்டிற்குச் சொந்தமான பெரும் தொகையான நிதி முதலீடு செய்யப்பட வேண்டும் என்றும், இதற்காக, முதல் வரிசை…

Read More

வற்வரி திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவிப்பு

சேர்பெறுமதி வரி (திருத்தம்)” எனும் சட்டமூலம்   தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட   மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் தலைமையில் கூடிய நிலையில் இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின்போதே  இந்த விடயத்தை  அவர் சபைக்கு அறிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “சேர்பெறுமதி வரி (திருத்தம்)” எனும் சட்டமூலம்   தொடர்பில் உயர்…

Read More

தரம் குறைந்த எரிபொருள் கொள்வனவோ விநியோகமோ இடம்பெறவில்லை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர

தரம் குறைந்த எரிபொருள் கொள்வனவோ விநியோகமோ நாட்டில் இடம் பெறவில்லை. அது தொடர்பில் ஊடகங்களில் வெளிவரும் செய்தியில் உண்மை இல்லை என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தரம் குறைந்த எரிபொருள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் குற்றச்சாட்டுக்களை…

Read More

இளம் தாய் தற்கொலை

பாலாவி – ரத்மல்யாய , முல்லை ஸ்கீம் கிராமத்தில் இளம் தாய் ஒருவர் நேற்று (01) ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார். முஹம்மது ஹனீபா பாத்திமா நிபாஸா (வயது 34) எனும் மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார் என புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார். நேற்றிரவு 1.30 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் வீட்டில் கணவனும், மூன்று பிள்ளைகளும் தூங்கிய பின்னர் குறித்த இளம் பெண் விட்டுக்குள்…

Read More

காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள விசேட அனுமதி

காஸா பகுதியில் சிக்கியிருந்த 17 இலங்கையர்களும் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (02) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா, தூதரகம் ஊடாக இது குறித்து அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார். அதன்படி, இந்தக் குழுவைச் சேர்ந்த சுமார் 15 பேர் இன்று மதியம் 12 மணிக்குள் எகிப்தை அடைய உள்ளனர். “இதற்குத் தேவையான பணிகளை எகிப்து தூதரகமும், பாலஸ்தீனத்திலுள்ள…

Read More

இந்தியாவுடன் இன்று மோதும் இலங்கை!

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (02) நடைபெறவுள்ளது. இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இறுதியாக 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையும் இந்தியாவும் வங்கடே மைதானத்தில் சந்தித்தன. இந்நிலையில் இந்த உலகக் கிண்ண தொடரில் இதுவரை ஒரு போட்டியிலேனும் தோற்காத ஒரே அணியாக இந்திய அணி, இன்று இலங்கை அணிக்கு எதிராக களம் இறங்குகிறது. அதேநேரம்…

Read More

எச்.ஐ.வி. தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 485 எச்.ஐ.வி. தொற்றாளங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். கடந்த வருடத்தை விட இந்த வருடம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார். “இலங்கையில் இந்த ஆண்டு 4,100 எச்.ஐ.வி நோய்த்தொற்று இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் இறுதி வரை, 485 புதிய எச்.ஐ.வி நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ஒரு அதிகரிப்பாக…

Read More

இரத்த காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

சூரியவெவ வைத்தியசாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (01) காலை, வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். சடலத்தை பரிசோதித்த போது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டு வலது காதில் ரத்தம் கசிந்துள்ளதாகவும் இது சந்தேகத்திற்குரிய மரணம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை,…

Read More

மருத்துவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று (02) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டைத் தணிக்க அரசாங்கம் மருத்துவர்களைத் தக்கவைக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி ஊவா மாகாணத்தில் இன்று காலை 08.00 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர்…

Read More

நாம் 200 தேசிய நிகழ்வு இன்று

மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை கொழும்பில் ‘நாம் 200’ எனும் தொனிப்பொருளில் தேசிய நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்திய வம்சாவளியான மலையக மக்களுக்கு 200 ஆண்டுகள் கடந்தும் கிடைக்கப் பெறாமலுள்ள உரிமைகள் மற்றும் சலுகைகள் தொடர்பில் இலங்கைக்கு மாத்திரமின்றி சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், பிரதமர் தினேஷ் குணவர்தன, இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட முக்கிய இராஜதந்திரிகள்,…

Read More