நாளை கூடுகிறது சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு

இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழுவானது நாளை திங்கட்கிழமை (13) கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் சபை அமர்வுகளில் தொடர்ச்சியாக நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகள் தொடர்பில் சிறப்புரிமைகளை பயன்படுத்தி கருத்துக்களை வெளிப்படுத்துவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.  மேலும் இந்த விடயம் சம்பந்தமாக நிறைவேற்றுக்குழுவில் தொடர்ச்சியாக கலந்துரையாடப்படவுள்ளதோடு, உறுப்பினர்கள் சிறப்புரிமைகளை பயன்படுத்தும் அதேநேரம், நீதித்துறையின் சுயாதீனத்தினை பாதுகாப்பு தொடர்பிலும் எவ்விமாக விடயங்களை கையாள முடியும் என்பது தொடபிலான ஒரு மூலோபாயத்தைக் கண்டறிவது…

Read More

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமையாளர்களுக்கான ஆட்சேபனைக்காலம் நிறைவு !

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இழப்பீட்டுக் கோரிக்கை மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கு எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட அவகாசம் நிறைவடைந்துள்ளது.  முன்னதாக, இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம், கடந்த ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி வரையில் எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமையாளர்கள் தமது ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை வழங்கியதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன் பின்னர், அக் கப்பலின் உரிமையாளர்கள் தாக்கல் செய்திருந்த ஆட்சேபனைகள் குறித்து இலங்கை அரசாங்கம் மேலதிக…

Read More

எனக்கு உயிர் அச்சுறுத்தல் : இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தத்திற்கு எதிராக ஐ.சி.சி.யில் மேன்முறையிடுவேன் – விளையாட்டுத்துறை அமைச்சர்

இலங்கை கிரிக்கட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையில் மேன்முறையீடு செய்யப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்று தண்ணீர் கூட அருந்த மாட்டேன். காரணம் அதில் நஞ்சையும் கலக்கக் கூடும். அந்தளவுக்கு எனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவரின் கோரிக்கைக்கு அமையவே சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளதாக…

Read More

ஜனநாயகத்திற்கு மரண அடி!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதில் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என அந்தக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் மாகாண சபைகளை தொடர்ந்தும் நடத்துவது நாட்டின் ஜனநாயகத்திற்கான மரண அடி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை அரசியலமைப்பில் திருத்தம் செய்வதைத் தவிர வேறு எந்த…

Read More

இலங்கை அணி நாடு திரும்பியது!

2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று (10) அதிகாலை 05.05 மணியளவில் தாயகம் திரும்பியது.   இந்தியாவின் பெங்களூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல். – 174 விமானம் ஊடாக இலங்கை அணி நாடு திரும்பியிருந்தது. அவர்களை வரவேற்க இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் பலர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திற்கு வந்திருந்தனர். கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இருந்து வௌியேறுவதற்கு அவர்களுக்கு பேருந்தொன்று தயார் செய்யப்பட்டிருந்த போதிலும், பல…

Read More

நிறைவுக்கு வந்தது அஞ்சல் ஊழியர்களின் வேலை நிறுத்தம்

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. சுற்றுலா விடுதிகள் திறப்பு என்ற போர்வையில் நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் மற்றும் கண்டி தபால் நிலைய கட்டிடம் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழியர்கள் கடந்த 8ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி நேற்று (09) நள்ளிரவுடன் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை நிறைவடைந்துள்ளதுடன், இன்று முதல் வழமை போன்று கடமைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. பணிப்பகிஷ்கரிப்பின்…

Read More

ரொஷான் ரணசிங்கவின் கருத்து தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீவிர கரிசனை

இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பான இடைக்கால குழு விவகாரத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்ட தீர்ப்பை விமர்சித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.  அதுமாத்திரமன்றி பாராளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது நீதிமன்றக்கட்டமைப்பின் சுதந்திரத்துக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது: இலங்கை கிரிக்கெட் சபை குறித்த இடைக்கால…

Read More

95 வைத்தியசாலைகள் மூடப்படும் நிலைமையில் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தகவல்

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் தட்டுப்பாடு காரணமாக 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, 95 வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய கட்டத்தில் உள்ளன. ஒரு வருட காலத்துக்குள் சுமார் 1500 வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளமையே இதற்கான காரணமாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகும் நிலைமை தற்போது…

Read More

வரி அதிகரிப்புக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு நிர்ணய விலை – உணவு பாதுகாப்பு அமைச்சர்

வரி அதிகரிப்புக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட சீனியை விற்பனை செய்வதற்கு 275 ரூபா அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிப்பதற்காக இறக்குமதியாளர்களின் களஞ்சியசாலைகளில் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். பருவ காலத்தில் முட்டை விலை அதிகரிக்கப்பட்டால், அதனை இறக்குமதி செய்யும் காலமும் நீடிக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டால் அதற்கும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக…

Read More

கொழும்புத் துறைமுக உட்கட்டமைப்பிற்கு அரை பில்லியன் டொலர்கள் – உறுதியளிக்கும் DFC

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் தெற்காசிய பிராந்தியத்திற்கு முக்கியமான உட்கட்டமைப்பை வழங்கக் கூடிய ஒரு ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் பணிக்கு உதவுவதற்காக அரை பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையினை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் (DFC) இன்று அறிவித்தது. தனது பங்காளரின் அபிவிருத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவி செய்யும், உள்ளூர் சமூகங்களின் முன்னேற்றத்தில் முதலீடு செய்யும் மற்றும் உள்ளூர் நிதி நிலைமைகளுக்கு மதிப்பளிக்கும் உயர்தர உட்கட்டமைப்பு வசதிகளுக்கு நிதியளிப்பை…

Read More